மதுரையில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி | ஏராளமான பார்வையாளர்கள் வருகை
Women Entrepreneurship Fair in Madurai | Large number of visitors

மதுரையில் பெண்கள் தொழில் முனைவோர் கண்காட்சி அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மதுரை மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலர்கள் திருப்பதி கார்த்திகேயன், எடில் கார்த்திகேயன், பெட்கிராஸ் அமைப்பின் நிறுவனர் சுப்புராம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியினை திறந்து திறந்து வைத்தனர்.
தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் பேசும் போது பெண்கள் தொழில் முனைவோராக மாறும் அவசியத்தையும் அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்தும் மற்றும் மகளிர் குழுவினரால் தயாரிக்கப்படும் பொருட்களை வணிகம் செய்வது குறித்தும் பேசினர்.
பின்னர் இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர். அரங்குகளில் தொழில் முனைவோர்கள் தங்கள் தயாரிக்கப்படும் பொருட்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
அதில் சிறுதானிய லட்டு சிறுதானியங்களால் செய்யப்பட்ட ஹெல்த் மிக்ஸ் கோர பாயால் செய்யப்பட்ட பெட்டி, பர்ஸ், வாழைநாறால் செய்யப்பட்ட பேக், கைப்பை, மூலிகையினால் செய்யப்பட்ட ஊதுபத்தி, சாம்பிராணி, களிமண்ணால் செய்யப்பட்ட ஊதுபத்தி ஸ்டாண்ட், வாழைப்பழத்தில் செய்யப்பட்ட மாவு வகைகள் என காட்சியகப்படுத்தி வைத்திருந்தனர். அனைவரும் பார்வையிட்டு வாங்கி சென்றனர்.