
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு சிறு மற்றும் நடுத்தா தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) ஆனது. தேசிய முகமையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் கிராமப்புறங்களில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியம் (KVIB) மூலமாகவும், கிராம மற்றும் நகர்புறங்களில் மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் கயிறு வாரியம் (Coir Board) மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மதுரை பெட் கிராப்ட் நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாமினை நடத்தியது.
இந்த முகாமில் பேசிய காதி மண்டல இயக்குனர் ஆர்.பி.அசோகன் பேசியபோது, பெண்கள் முன்னேற சுய தொழில் அவசியம், உணவு பொருட்கள் சார்ந்த தொழில், வீட்டிலிருந்தே கூடை பின்னுதல், பொம்மை தயாரித்தல், மற்றும் தானியங்களில் சத்து மாவு உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்தல் என பல்வேறு தொழில்களை அவசியம் செய்ய வேண்டும் என்றும், பெண்கள் தொழில் செய்ய மானிய முறையில் கடன்கள் வழங்க நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.குறிப்பாக மானியத்துடன் கடன் வசதி செய்து தருவதாகவும் கூறினார்.
மேலும், அதிகபட்ச திட்ட மதிப்பீடாக (Project Cost) உற்பத்திப் பிரிவிற்கு 50 லட்சம் ரூபாய், சேவை பிரிவிற்கு 20 லட்சம் ரூபாயும் மானியத்துடன் கடன் வழங்க இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பயனாளிகள் ஆன்லைன் மூலமாக www.kviconline.gov.in என்ற முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முகாம் நடைபெற்று வருகிறது என்றார். முன்னதாக இம்முகாமினை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கோட்ட இயக்குனர் R.P.அசோகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் M.சுப்புராம், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உதவி இயக்குனர் T.V.அன்புச்செழியன், மதுரை, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் S. கணேஷன், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சந்தான பாண்டியன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.