செய்திகள்போலீஸ்

மதுரையில் பிறந்து முப்பத்தி எட்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை | சின்டெக்ஸ் தொட்டியில் சடலமாக மிதந்த கொடூரம்

Thirty eight day old baby born in Madurai | Cruelty floating corpse in Syntex tank

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டுப் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன், இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த முப்பத்தி எட்டு நாட்களுக்கு முன்பாக மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் தனது மூத்த மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சித்ரா இன்று மாலை தனது மூன்றாவது கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் வீட்டிலேயே விட்டுவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணவில்லை என்று அறிந்து அதிர்ச்சியுற்று. உடனடியாக அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர்.

அப்போது சித்ராவின் பக்கத்து வீட்டில் மோட்டர் போடுவதற்காக மாடிக்கு சென்று பார்த்தபோது மொட்டை மாடியில் இருந்த சின்டெக்ஸ் தொட்டியில் குழந்தை இறந்த நிலையில் தொட்டியில் மிதந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் சின்டெக்ஸ் தொட்டியில் மூழ்கி கொலை செய்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: