
மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி (நிர்மலா பெண்கள் மேனிலை பள்ளி) உள்ளது. இங்கு 3500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளின் விடுதி இருக்கிறது. இங்கு மதுரை அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் மகள் இந்த பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
விடுதியில் தங்கி படித்து கொண்டிருந்த போது இன்று தேர்வு என்பதால் காலையில் முதல் மாடிக்கு சென்று படித்து கொண்டிருந்த எதிர்பாரதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அப்பகுதியில் இருந்த விடுதி வார்டன், மற்றும் ஆசிரியைகள் மாணவி யை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவியை மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.