
மதுரையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த ஒன்பது பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை திடீர் நகர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஹீரா நகர் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஏழுமலையைச்சேர்ந்த சிவன் பாண்டியன் 35, நேதாஜி ரோடு சண்முக மகன் சதீஷ்குமார் 24.
மற்றும் வாடிப்பட்டி குருவித்துறை கண்ணன் மகன் அருண்குமார் 25, மதுரை எம் புதுப்பட்டி சசிகுமார் மகன் அபினேஷ் 21 ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
சுந்தர்ராஜபுரம் மார்க்கெட்டை அருகே மாநகராட்சி பார்க் அருகில் கஞ்சா விற்பனை செய்த விருதுநகர் மாவட்டம் நரிகுடியைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் முத்துக்குமார் என்ற கொக்கு முத்து குமார் 2 4, வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ரவி ராஜன் மகன் சிவகுமார் 23.
மேலும், ஜெயந்ரம் ஜீவா நகர் மீனாம்பிகை நகர் ஆறாவது தெருவை சேர்ந்த மாரி மகன் கண்ணன் 23, ஜெயிந்த்புரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் வெங்கடேசன் 27, ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தெப்பக்குளம் கேட்லாக் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த கீரை துறை பொன்னுசாமி மகன் தனுஷ்கோடி 18 என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.