
மதுரையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சீமான் நகர் நூல் பட்டறை தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 43.ஜ இவரது பைக்கை கருப்பாயூரணி பாரதி தெருவில் உள்ள டாஸ்மார்க் பார் எதிரே நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது இந்த பைக்கை மரம் ஆசாமி திருடி சென்று விட்டார் .இது குறித்து அவர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
அனுப்பானடியைச் சேர்ந்தவர் சுகுமார் 41. இவர் அண்ணாநகர் குருவிக்காரர் சாலையில் உள்ள பார் அருகே தனது பைக் நிறுத்தி இருந்தார் அந்த பைக்கையும் மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இது குறித்து சுகுமார் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
விளாங்குடியைசேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஜீவானந்தம் 21. இவர் விளாங்குடி பறவை மார்க்கெட் அருகே தனது பைக்கை நிறுத்தி இருந்தார். அந்தப் பைக்கும் திருடுபோய்விட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரை வடிவேல் கரை புதுக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் 40. இவர் மதுரை அரசு மருத்துவமனையில் உறவினரை பார்க்க சென்றிருந்தார். தான் ஓட்டிச் சென்ற பைக்கை மருத்துவமனை முன்பாக நிறுத்திச் சென்று விட்டு பின்னர் வந்து பார்த்தபோது அந்த பைக்கும் திருடப்ருந்தது.இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு அசாமியை தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் மீனாட்சி நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் குமார் 53 .இவர் வீட்டு முன்பாக தனது மொபட்டை நிறுத்தி இருந்தார்.இதை மர்ம ஆ சாமி திருடி சென்று விட்டார். இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடர்களை பிடிப்பதற்கு மதுரை மாவட்டம் காவல்துறை சார்பில் புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விரைவில் பைக் திருடர்கள் பிடிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.