
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது இந்த நிலையில் சோழவந்தான் ரோடு செங்குளம் கிழக்குத் தெருவில் உள்ள அசோக் பாண்டியன் S/0 வையாபுரி செங்குளம் கிழக்கு தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான புளியமரம் அசோக் பாண்டியன் என்பவர் வீட்டின் மேல் புளிய மரம் சாய்ந்து ஆஸ்பட்டசீட் மீது விழுந்து, சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் அதிர்ஸ்டவசமாக ஏதும் நிகழவில்லை.
சம்பவம் குறித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெயராணி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர் கூல்பாண்டி தலைமையில் குழுவினுடன் விரைந்து சென்று பவர்சா மூலம் கட் செய்து மற்றும் ஜேசிபி மூலம் அகற்றினர்.
மரம் விழுந்த காரணத்தினால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக திருமங்கலம் சோழவந்தான் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் தீயணைப்பு வீரர்களின் துரித செயல்பாட்டினால் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.