
முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு பனைவிதைகள் கொண்டு அப்துல்கலாம் அவர்களின் திருவுருவத்தை வரைந்து அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் க.அசோக்குமார்.
இவர் மரம் நடுதல், புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், விதை பந்து தயாரித்தல் உள்பட பல்வேறு செயல்களை தனக்கே உரிய வித்தியாசமான முறையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது அப்துல்கலாம் அவர்களை ஓவியம் வரைந்து அதன் மீது பனைவிதைகள் சேர்த்து, மிக அழகாக வித்தியாசமான முறையில், குழந்தைகள் மனமதில் மரம் நட வேண்டும் என்ற ஆவலையும், அப்துல்கலாம் கண்ட கனவை நிஜமாக்கும் முயற்சியாகவும் இதனைச் செய்தள்ளார்.
இது குறித்து சமூக ஆவர்வலர் க.அசோக்குமார் கூறுகையில், அப்துல்கலாம் அவர்கள் பசுமை மீது மிகுந்த பற்று கொண்டவர். பனை மரங்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விதமாகவும், மழைக்காலம் வருவதால் பனைவிதைகள் நிறைய கிடைக்க வாய்ப்பு இருத்தால், அதனைச் சேகரித்து நீர்நிலைகளின் கரைகளில் விதைக்க வழியுறுத்தியும்.
அப்துல்கலாம் அவர்களின் திருவுருவத்தின் மூலம் பனைவிதை குறித்து எடுத்துரைப்பதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க இயலும் என்பதற்காகவும் அய்யா அவர்களின் நினைவு தின புகழஞ்சலி செலுத்தும் விதமாக இம் முயற்சி மேற்கொள்கிறேன் என்று தெரித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இதுபோல் வித்தியாசமான முறையில் அவரது நினைவை இளைஞய சமுதாயத்திற்கும், குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வதில் இவர் தனித்திறமை வாய்ந்தவர். நீங்களும் க.அசோக்குமாரை பாராட்ட அழைக்கலாம். அவரது தொடர்பு எண் 9171870007.