செய்திகள்

மதுரையில் பகுதிநேர தூய்மைப்பணியாளர்‌ காலிப்பணியிடங்கள்‌ நேர்காணல் | விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன

Interview with Part Time Cleaner ‌ Vacancies in Madurai | Applications are welcome

மதுரை மாவட்டத்தில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌/சீரமரபினர்‌ மற்றும்‌
சிறுபான்மையினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ விடுதிகளில்‌ காலியாகவுள்ள 21
பகுதிநேர தூய்மைப் பணியாளர்‌ பணியிடங்கள்‌ மாதம்‌ ஒன்றுக்கு ரூ.3,000, மட்டும்‌
தொகுப்பூதியத்தில்‌ பணி நியமனம்‌ செய்யப்படவுள்ளது.

மேற்கண்ட பகுதிநேர தூய்மைப்பணியாளர்‌ (ஆண்‌/பெண்‌) காலிப்பணியிடங்கள்‌ நேர்காணல்‌ மூலம்‌, இனச்சுழற்சியின்‌ அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும்‌ தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

1. தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.

2. வயது வரம்பு 01.07.2022 தேதியில்‌ 50/57- 18 முதல்‌ 35, 8௦, 8014, ௩190 & 01௦ 18 முதல்‌
32, இதர பிரிவினர்‌ 18 முதல்‌ 30 வயதிற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. அரசு
விதிமுறைகளில்‌ அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில்‌ தளர்வு அளிக்கப்படும்‌.

மேற்படி தகுதிகளுடன்‌ மதுரை மாவட்டத்திலுள்ள விடுதிகளில்‌ பகுதிநேர
தூய்மைப்பணியாளர்‌ (தொகுப்பூதியம்‌) பணிபுரிய விருப்பம்‌ உள்ளவர்கள்‌ இத்துடன்‌
இணைக்கப்பட்டுள்ள மாதிரிப்படிவம்‌ போன்று தயார்‌ செய்து அதனை பூர்த்தி செய்தும்‌, உரிய
சான்றுகளின்‌ நகல்கள்‌ இணைத்தும்‌ சமீபத்தில்‌ எடுக்கப்பட்ட பாஸ்போட்‌ அளவு புகைப்படம்‌ ஒட்டி.

அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகம்‌, மாவட்ட
ஆட்சியர்‌ வளாகம்‌, மதுரை என்ற முகவரிக்கு 30.05.2022 தேதிக்குள்‌ சமர்பிக்கும்‌ படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌, காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஆகியவற்றின்‌ மீது அரசு பரிசீலிக்காது எனவும்‌, மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின்‌ அடிப்படையில்‌ விண்ணப்பம்‌ செய்து கொள்ள மதுரை மாவட்ட
ஆட்சியர்‌ மரு.அனீஷ் சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: