
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதிலும் தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
இந்த கன மழையில் மேல பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4 எதிர்புறம் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடைந்துள்ளனர். இறந்தவர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்த குமார் என்பது போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைபோல், மழை பெய்துகொண்டிருந்த போது, மதுரை மாநகர் ஆண்டாள்புரம் மேற்குதெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சு்வேலையில் ஈடுபட்டுகொண்டிருந்ந ஆண்டாள்புரம் எச்.எம்.எஸ். காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் (52) மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (38) ஆகிய இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலயே பரிதாபதாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். மதுரையில், தொடர்ந்து இடியுடன் பெய்த கனமழையால் 4பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.