செய்திகள்

மதுரையில் நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி | விண்ணப்பங்கள் வரவேற்பு

3 lakhs each to set up modern laundries in Madurai Applications are welcome

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3.00 இலட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

பயனாளிகளுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

1. குழு உறுப்பினர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும்.
2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ( Ministry of Micro , Small and Medium Enterprises ) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கலாம்.
3.10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
4. குழு உறுப்பினர்கள் பி.வ. , மி.பி.வ., (ம) சீ.ம., இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
5. குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள சலவைத் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள் கொண்டு, மாவட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 20.09.2022-க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: