
மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி காவல் எல்லைக்கு உட்பட்ட ஜெய் நகர் பகுதியில் சேர்ந்த கருப்புசாமி மகன் அய்யனார். வயது 50. இவர் மயான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுநள்ளிரவு ஒரு மணி அளவில் பைபாஸ் சாலை ஜெய் நகர் பகுதியில் அய்யனார் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மது போதையில் வந்ததாக கூறப்படும் மர்ம நபர்கள் அய்யனாரை சரமாரியாக வெட்டிச்சென்று தப்பி ஓடினர்.
சம்பவம் குறித்து தகவல் இருந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நள்ளிரவில் கொலை சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1