
மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வீரய்யா இவரது மகன் பிரகாஷ் வயது 25. கப்பலூர் பகுதியில் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் வீட்டின் உள்ளே செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பர்களான ஆசிப் உட்பட ஆறு பேர் திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கொடூரமாக வெட்டி விட்டு தப்பிக்க முயற்சித்தனர்.
அதை தடுக்க முயற்சி செய்த பிரகாஷின் சித்தி வாசுகியின் காலில் வெட்டி விட்டு, கைலியை அவுத்துவிட்டு, பிரவுசருடன் ஓடி தப்பினார்.
மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயம் பட்ட வாசுகையை 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைகாகரன காரணம் என்ன ? எதற்காக செய்யப்பட்டது ? என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலையாளியாளிகளை பிடிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் இரட்டை கொலை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.