செய்திகள்

மதுரையில் நடிகர் அருள்நிதி நடித்த டைரி படத்தின் புரோமோஷன் விழா

Actor Arulnidhi starrer Diary promotion event in Madurai

மதுரை திரைப்பட நடிகர் அருள்நிதி நடித்து வெளிவர உள்ள டைரி திரைப்படத்தின் புரோமோஷன் என்று சொல்லக்கூடிய விளம்பரப்படுத்தும் விழா மதுரையில் உள்ள வெற்றி சினிமாஸ், சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் கதாநாயகன் அருள்நிதி, படத்தின் கதாநாயகி, படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர், நடிகைகள், பாடலாசிரியர், பட விநியோகஸ்தர் குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு முன்னதாக தியேட்டரில் டைரி படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள், இயக்குனர் ,பாடலாசிரியர் உள்ளிட்டோர் ரசிகர்கள் மத்தியில் டைரி படத்தினை பற்றி பேசினார்கள்.

மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர், நடிகைகள், டைரக்டர் பதில் கூற, கலந்துரையாடலும் நடைபெற்றது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: