கலெக்டர்செய்திகள்

மதுரையில் நடப்பு மாதத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறலாம் | கலெக்டர் அறிவிப்பு

Madurai to get National Identity Card for disabled people in current month Collector Notice

மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் வட்டார அளவில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளில் செப்டம்பர்/2022-ஆம் மாதத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதிலுள்ள சிரமங்களை மாற்றுத்திறனாளிகள் தவிர்க்கும் பொருட்டு கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒவ்வொரு மாதமும் பிரதி செவ்வாய் கிழமைகளில் காலை 10.00 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், ஒவ்வொரு மாதமும் பிரதி புதன் கிழமைகளில் காலை 10.00 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

அதன்படி செப்படம்பர்/2022-ஆம் மாதத்தில் 06.09.2022-அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 07.09.2022-அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள்,

மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், தங்களது குடும்ப அட்டை அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகியவற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: