செய்திகள்

மதுரையில் தீயணைப்பு வீரர்களுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை பாராட்டு

Guide to Firefighters in Madurai Humans Foundation Appreciation

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கினார்.

சமீபத்தில் மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலைய வீரர் கார்த்திக் விஷவாயு நிறைந்த குழியில் இருந்து மூன்று உடல்களை மீட்டதற்க்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி கவுரவித்தார்.

இதைத் தொடர்ந்து வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திடீர் நகர் தீயணைப்பு நிலையத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தீயணைப்பு வீரர் கார்த்திக் சாதனையை வாழ்த்தி அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் அனைத்து வீரர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் தங்களது சிறப்பான சேவைகளை செய்து வருவதை பாராட்டி தீயணைப்பு நிலையம் பெயரில் அதிகாரி பாலமுருகனிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அங்கு பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் குடிநீர் பாட்டில்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார் மற்றும் உதவும் உள்ளம் பெரியதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: