ஆர்ப்பாட்டம்செய்திகள்

மதுரையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

An attention-grabbing demonstration by the Tamil Nadu Primary School Teachers' Alliance in Madurai

மதுரையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அதன் மாவட்டத் தலைவர் ஜோசப் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிறப்புரையாக அதன் மாவட்டச் செயலாளர் கணேசன் உட்பட்டோர் ஆண்கள் பெண்கள் சுமார் 250 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ; நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஒய்வூதியத் தினை இரத்து செய்து பழைய ஒய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஒய்வூதியமே தொடரட்டும் என தொடங்கப்பட்டுள்ளது.

அதுபோல், தமிழகத்திலும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதிய குழு அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள காலம் தொட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது.

இதனால், இடைநிலை ஆசிரியர்களுக்கு பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தேர்தல் வாக்குறுதி யில் அறிவித்தது போல் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலை சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தொழில் நுட்பத்தால் மேம்படாத EMIS வலைதளத்தின் மூலம் ஆசிரியர்கள் பதிவேற்றங்கள் செய்திட வேண்டும் புள்ளி விவரங்களைத் தொகுத்து வழங்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ,ஆசிரியர்கள் கற்றது கற்பித்தலுக்கு இடையூறு ஏற்பட்டு மாணவர்களுக்கு கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள் பதவியேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும்.

ஒரே நாடு ஒரே கொள்கை ஏற்ற ஏழாவது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தப்பட வேண்டும் ,மத்திய அரசு இதற்கானநிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகல விலை பட்டியினை நிலுவையின்றி அறிவித்த தேதி வழங்கப்பட வேண்டும், உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: