
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்த இருக்கின்ற இரண்டாம் நிலை போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு காவலர் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலகத்தால் ஆரம்பிக்கப்பட உள்ளன.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை மற்றும் வழிகாட்டுதல் படி, மேற்படி தேர்விற்கு விண்ணப்பித்துள்ள கிராமப்புற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சேடப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது பெயரினை பதிவு செய்துகொண்டு மேற்கண்ட இடங்களில் நடத்தப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம்.
தற்போது, தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கின்ற இந்து சமய அறிநிலைத்துறை (செயல் அலுவலருக்கான குருப் 7 மற்றும் குருப்-8 ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எற்கனவே குருப்-4க்கான பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.
இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் தற்போது ஏராளமான போட்டித்தேர்வர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பிட்ட காலவெளி இடையில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போட்டித்தேர்வுகளுக்கான பல்வேறு புத்தகங்கள் இவ்வலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வர்கள் புத்தகத்தினை பெற்று அலுவலகத்திலேயே படித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அத்துடன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டித்தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்காக புய. 1ரிரச0ப021௦௦5971109511.904. 1 என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் தேர்வாளர்கள் தங்களது பெயரினை பதிவு செய்து போட்டித்தேர்விற்கான புத்தகங்கள், முந்தைய வினாத்தாள் மற்றும் குழு கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளலாம்.
அத்துடன், அனைத்துப் போட்டித்தேர்வர்களும் பயன்பெறும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 59 மணி வரையிலும். அதே நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாக மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் தாங்களும் கலந்து கொள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுவாரியத்தின் விண்ணப்ப படிவம் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் துணை இயக்குநர், டாக்டர்.கா.சண்முகசுந்தர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.