செய்திகள்

மதுரையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு போராட்டம்

In Madurai, Tamil Nadu Satnuvu Employees Union is protesting to attract attention

தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தை தமிழக அரசு ஏற்றை நடத்தப்பட வேண்டும், குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள. காலிப் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும், அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

மற்றும் ஒய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவதுபோல் ரூ 6,750 ஐ அகவிலைப் படியுடன் கூடிய ஒய்வூதியமாக வழங்கிட வேண்டும்.

இதுவரையிலும், ஒய்வு பெறும் வயதில் நீட்டிப்பு சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்திட் வேண்டும் என்பது உள்டப, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

மதுரையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மதுரை மாவட்ட சார்பில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பு அதன் மாவட்டத் தலைவர் கௌரியம்மாள் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு தர்னா போராட்டம் நடைபெற்றது .

இதில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பெண்கள் இந்த கவன ஈர்ப்பு தர்னா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: