மதுரையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
State Executive Committee meeting of Tamil Nadu Village Administrative Officers Association at Madurai

மதுரையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் மாநில தலைவர் இராஜன் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆன்லைன் மாவட்ட மாறுதலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கி பணி ஏற்பு நாளை முதுநிலையாக கருத்தில் கொண்டு பட்டியல் வெளியிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சதவிகிதத்தை 50 சதவிகிதம் என்பதிலிருந்து குறைத்து முடிந்தவரை அவர்களுக்கு ஏதுவாக பணி மாறுதல் வழங்க வேண்டும்.
மேலும் கணினி, இணையம் மற்றும் கழிப்பிட வசதிகள் உடன் கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிய ஏதுவான சூழ்நிலையுடன் கூடிய அலுவலகம் கட்டித் தரப்பட வேண்டும்.
கூடுதலாக தற்போது வழங்கப்பட்டுள்ள உட்பிரிவு பட்டா மாறுதல் பாரபட்சம் இன்றி அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். தமிழ் நிலம் உள்நுழைவிற்கு உடனடியாக OTP முறையை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில பொறுப்பாளர்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட செயலாளர் ராஜாமணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.