
மதுரை மாநகரில் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக மதுரை மாநகர காவல்துறையால் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மாநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கிடைப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர், தெற்கு வெளி வீதி பகுதியிலுள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டறிந்து சோதனை செய்தனர்.
இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தெற்குவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், வல்லவன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.