செய்திகள்
மதுரையில் தங்க குதிரையில் பவனி வந்த கட்டிக்குளம் மாயாண்டி சாமி
Mayandi Sami came to Madurai on a golden horse

மதுரை பழங்காநத்தம் பகுதியில், மாயாண்டி சாமி. கள்ளழகர் வேடத்திலும், நவநீத பெருமாள் வேடத்திலும், குதிரையில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நள்ளிரவிலும் ஏராளமான பக்தர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
மதுரை மாவட்டம் கட்டிக்குளம் மாயாண்டி சாமிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மதுரை கட்டி குளத்திலிருந்து புறப்பட்டு மதுரை மாவட்டம் நகர பகுதி மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குதிரையில் வலம் வந்து திருப்பரங்குன்றம் சென்றடைந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை அடுத்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏராளமான பக்தர்கள் படை சூழ, கட்டிக்குளம் மாயாண்டி சாமியை மனமுருக தங்க குதிரையில் வந்த சுவாமியை அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
+1
+1
+1
+1
+1