மதுரையில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் மேலாண்மை திட்டம் குறித்து ஜல் சக்தி அமைச்சகத்தின் விஞ்ஞானி ராஜ்கிஷோர் மொஹந்தி ஆய்வு
Rajkishore Mohanty, Scientist of Ministry of Jal Shakti Study on Water Management Project of Ministry of Jal Shakti in Madurai

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஜல்சக்தி அமைச்சகத்தின் விஞ்ஞானி.ராஜ்கிஷோர் மொஹந்திஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் மேலாண்மை, கழிவு நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை ஆராய்ந்து சிறப்பு வல்லுனர் குழு மதுரை மாநகரை சிறந்த மாநகராட்சிகளுள் ஒன்றாக தேர்ந்தெடுத்து இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் மதுரை மாநகராட்சிக்கு நீர் மேலாண்மையில் 3வது இடத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தெப்பக்குளத்தில் நீர் சேகரிக்கப்பட்டுள்ளதையும், சக்கிமங்கலம் ஊராட்சியில் ஊரணிகள் தூர்வாரப்படும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சக்கிமங்கலம் ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் நீர் மேலாண்மை குறித்தும், தண்ணீர் சேகரிக்கும் முறை, மழைநீரினை சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், ஜல் சக்தி இயக்கத்தின் விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீர் மேலாண்மை திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு நினைவுப்பரிசினை மாவட்ட ஆட்சியர், ஜல்சக்தி அமைச்சகத்தின் விஞ்ஞானி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாநகராட்சி செயற் பொறியாளர் பாக்கியலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்கிமங்கலம் ஊராட்சி தலைவர், உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.