சுற்றுலாசெய்திகள்

மதுரையில் உலக சுற்றுலா தினம் சிறப்பு போட்டிகள் | ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

Special competitions on the occasion of World Tourism Day in Madurai Calling interested college students

இந்திய அரசு சுற்றுலாதுறை சென்னை மண்டல அலுவலகம், தமிழ் நாடு சுற்றுலாத்துறை, மதுரை டிராவல் கிளப், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி மற்றும்  சுற்றுலா தொழில் முனைவோர்கள் ஆகியவை இணைந்து மதுரையில் உலக சுற்றுலா தினம் (27/09/2022) கொண்டாட்டம், செப்டம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று தினங்கள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.மு.ஸ்ரீ பாலமுருகன் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் மதுரையில் சிறப்பாக இரு தினங்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இந்த கொண்டாட்டம் இரு நிகழ்வுகளாக “சுற்றுலாமறு சிந்தனை” (Rethinking Tourism) என்ற தலைப்பில் மூன்று தினங்கள் கொண்டாடப்பட உள்ளது.

முதல் நாள் நிகழ்வு : 25.09.2022

இதில் முதல் நாள் நிகழ்வாக 25.09.2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருமலை நாயக்கர் மஹாலில் முன்னணி ஓவியர்களின் சுற்றுலா சார்ந்த ஓவியக்கண்காட்சி நடைபெறுகிறது. அதேபோல், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் சவுத் தமிழ்நாடு டிராவல் அசோசியட்ஸ் சார்பில், மதுரை கீழக்குயில்குடியில், சமணர் சுற்றுலாதளங்களை பார்வையிடுதல், இலவச டாட்டு வரைதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள், சிரிக்கவைத்தால் பணம் ஆகிய நிகழ்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இதேபால் அன்று தெப்பக்குளத்தில் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கிராமிய இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்வு : 26.09.2022

26.09.2022ந் தேதி அன்று இரண்டாம் நிகழ்ச்சியாக, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு இடையே ஓவிய போட்டி, வினாடிவினா, புகைப்படம் மற்றும் சுற்றுலா வீடியோ பதிவு ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளோம். மேற்கூறிய போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள கல்லூரி மாணவ, மாணிவகள் கீழ்காணும் கூகுள் படிவத்தை 25/09/2022 மாலை 06:00மணிக்குள் பூர்த்தி செய்து அனுப்பலாம்.

லிங்க்: https://forms.gle/9sTNT8sjQr3Eyuy96

மூன்றாம் நாள் நிகழ்வு : 27.09.2022

இதேபோல் 27.08.2022 அன்று மூன்றாம் நிகழ்வாக, சுற்றுலா குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். இந்த நடை பயணம் காலை 7.30 மணிக்கு புதுமண்டபம் நந்தி சிலையிலிருந்து திருமலை நாயக்கர் மஹால் வரை நடைபெறுகிறது. மதுரையில் இந்தாண்டு நடைபெறும் இரண்டு நாள் உலக சுற்றுலா தின விழா கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

போட்டிகளின் விதிமுறைகள்

ஓவிய போட்டி (Painting)

மையக்கருத்து: (சுற்றுலா மறு சிந்தனை)
பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த எழுதுபொருட்கள், வண்ணங்கள் போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும்.
ஓவியம் A3 அளவிலான ஓவிய தாளில் (Art Paper) இருக்க வேண்டும்.
பங்கேற்பாளர்கள் தங்கள் ஓவியங்களில் தங்கள் பெயர் மற்றும் கையொப்பத்தை இடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வினாடி வினா (Quiz)

மையக்கருத்து:(இந்தியசுற்றுலா வளங்கள்)
வினாடி வினா டிஜிட்டல் படிவம் மூலம் நடத்தப்படும்.
ஒரு கல்லூரி/துறையிலிருந்து ஒரு குழுவில் 2 பங்கேற்பாளர்கள் மட்டுமே சேர முடியும்.
வினாடி வினாவில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து பங்கேற்பாளர்களும் அனைத்து சுற்றுகளையும் விளையாடலாம்.
அனைத்து சுற்றுகளிலிருந்தும் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்ணின்அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

சுற்றுலாவீடியோ பதிவு (Travel Vlog)

மையக்கருத்து: (சுற்றுலா மறு சிந்தனை – தமிழ்நாடு சுற்றுலா)
மையக்கருத்து தொடர்பான அசல் மற்றும் ஆக்கப்பூர்வமான பதிவை உருவாக்கவும்.
வீடியோ பதிவுஅதிகபட்சமாக 3 நிமிட கால அளவுக்குள் இருக்க வேண்டும்.
வீடியோ பதிவு‘நிலபரப்பு-முறையில்’ (Landscape-mode) இருக்க வேண்டும் மற்றும் உயர் தெளிவுத்திறனுடன் இருக்க வேண்டும்.
வீடியோவின் மொழி தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் பங்கேற்பாளர்களின் முகம் வீடியோவில் பதிவு செய்யவேண்டும்.

புகைப்படம் (Photography)

மையக்கருத்து: (சுற்றுலா மறு சிந்தனை)
புகைப்படம் அசல் மற்றும் சுயமாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். திருத்தப்பட்ட புகைப்படங்கள் தகுதி நீக்கம் செய்யப்படும்.
ஒரு புகைப்படம் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும்.
புகைப்படம் உயர் தெளிவுத்திறனுடன் இருக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் உட்பட எந்த வகையான கேமராவையும் பயன்படுத்தலாம்.
புகைப்படத்திற்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட வேண்டும்.

புகைப்படம் மற்றும் சுற்றுலா வீடியோ பதிவை 26 செப்டம்பர் 2022 காலை 09:00 மணிக்குள் பின்வரும் மின்னஞ்சலுக்கு (tourism.mkuc@gmail.com) தங்களது விவரங்களுடன் (பெயர், கல்லூரி, துறை மற்றும் தொலைபேசி எண்) அனுப்ப வேண்டும்.

ஓவிய போட்டி மற்றும் வினாடி வினா 26 செப்டம்பர் 2022 காலை 10:00 மணிக்கு திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெறும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு

மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் : சோ.மு. ஸ்ரீ பாலமுருகன் – 98421 12335
முனைவர் பா.ஜார்ஜ் (Principal i/c, MKU College, Mdu – 02) – 94437 94063
முனைவர் பா.ஹோரேஸ் (Head i/c, Dept. of Tourism, MKU College) – 98942 12366
G.ரவீந்திரன் (President, Travel Club) – 98432 65060
N.முகமது ஷெரிஃப் (Secretary, Travel Club) – 96000 59334

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
37
+1
1
+1
15
+1
0
+1
0
+1
0
+1
1

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: