கலெக்டர்செய்திகள்விளையாட்டு

மதுரையில் சிலம்பத்தில் அசத்தும் 12வயது சிறுவனுக்கு கலை இளமணி விருது | கலெக்டர் பாராட்டு

Art Ilamani award to 12-year-old boy who excelled in music in Madurai Collector Appreciation

மதுரை மாவட்டம் விராட்டிபத்தைச் சேர்ந்த சிறுவன் ஜெ.அதீஸ்ராம் (7ஆம் வகுப்பு) தமிழக அரசின் கலை பணபாட்டுத் துறையின் கீழ் செயற்படும் மாவட்டக் கலை மன்றத்தின் சார்பாக 2021-22 ஆண்டிற்கான சிறந்த சிலம்பக் கலைஞர் விருதும் பொற்கிழியும் கலை இளமணி பட்டமும் பெற்றுள்ளார்.

26.8.2022 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர். எஸ்.அனீஷ்சேகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலை இளமணி விருதினை வழங்கிப் பாராட்டினார்.

தற்போது சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை புரிவதற்கு பதிவு செய்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஸ்கேட்டிங் ஒட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது இவரது தனிச் சிறப்பு. கூடுதலாக வில் வித்தையிலும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார்.

இவர் பெற்றுள்ள சாதனைகள்

1. 2 மணி நேரம் தொடர்ச்சியாக ஸ்கேடிங் ஒட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி America Book of Records சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

2. 27.03.2022 – திருச்சியில் நடைபெற்ற ஹார்வேட் உலக சாதனை புத்தகத்தில் (Harvard World Records, London) தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை

3. 27.03.2022 – Pathanjali Book of World Records – Silambam Excellence Award

4. 02.01.2022 – Dindigul – OSCAR World Records – Silambam Stick event for twelve hours

5. 29.08.2021 – Universal Achievers Book of Records – Continuously rotating Silambam in 2021 seconds

6. 08.08.2021 – Oscar World Records

7. 16.02.2020 – Pasumai Book of Records – An hour non stop play on Silambam

 

விருதுகள்

1. Global Child Prodigy Awards 2022 பங்கேற்பு செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்.

2. 2021 ஆண்டிற்கான Global Kids Achievers Award

3. 31.10.2021 – மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் முப்பெரும் விழாவில் கலைச்செல்வர் விருது வழங்கப்பட்டது.

4. 26.01.2021 – 72வது குடியரசு தினவிழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.அன்பழகன் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார்

5. 2020 ஆண்டிற்கான International Sports Star Award விருது

6. செப்டம்பர் 14-15, 2019 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற World Silambam Championship 2019 போட்டியில் இரட்டைக் கம்பு வீச்சு பிரிவில் முதல் பரிசு

7. 17-19 நவம்பர் 2018ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு (1st Y.S.C.D.F National Games 2018-19)

சிலம்பாட்டம் குறித்து எடுக்கப்படும் சிலம்பன் எனும் குறும்படத்தில் குழந்தை நட்சத்திர நாயகனாக நடித்து வருகிறார்.

கூடுதல் தொடர்புக்கு : 99943-68576.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: