செய்திகள்போலீஸ் | தீயணைப்புத்துறை

மதுரையில் சிறையில் இருந்து வெளிவந்த இளைஞரை கொடூரமாக வெட்டிய மர்ம கும்பல்

A mysterious gang brutally hacked a youth released from jail in Madurai

மதுரை மேலவாசல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெபமணி (வயது 32) என்பவர் மீது கொலை கொள்ளை உள்பட சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து வெளியில் வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு தன் மகளின் பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஜெபமணியின் பின்ங்கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவத்தை போலீசார் ஜெபமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர கொலைச் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: