கலெக்டர்செய்திகள்போக்குவரத்து

மதுரையில் குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 25 வாகனங்கள் ஏலம் | ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு

Auction of 25 unclaimed vehicles seized by the Criminal Investigation Department in Madurai Invitation to participate in the auction

மதுரை மாநகரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினரால் பொது விநியோகத்திட்ட உணவுப்பண்டங்கள் கடத்தப்பட்ட போது கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 25 வாகனங்கள் (நான்கு சக்கர வாகனம் -6, மூன்று சக்கர வாகனம் – 1 மற்றும் இருசக்கர வாகனம் – 18) அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வாகனங்கள் கற்பக நகர் 10-வது தெரு, காவல் ஆய்வாளர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 20.07.2022-அன்று பொது ஏலம் விடப்படும்.

அன்றைய தினம் ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 18.07.2022 மற்றும் 19.07.2022 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மட்டுமே ஏல பிணைமுறி தொகை (முன்பணம்) 1,000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தேதியில் பணம் செலுத்தியவர்கள் மட்டும் 20.07.2022-அன்று நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். இந்த ஏலம் கற்பக நகர் 10-வது தெரு, காவல் ஆய்வாளர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் நடைபெறும். அதற்கு முன்பாக 18.07.2022 மற்றும் 19.07.2022 ஆகிய தேதிகளில் வாகனங்களை நேரில் பார்வையிட்டு கொள்ளலாம்.

மேலும், ஏலத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகலினை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: