மதுரையில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ நட்சத்திர உற்சவ நிகழ்வு | எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பங்கேற்பு
Kanchi Sri Maha Periyar's Anusha Nakshatra Utsava event in Madurai | Author Indira Soundararajan participates

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ நட்சத்திர உற்சவம் நிகழ்ச்சி மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது இவ்விழாவில் கலைமாமணி விருது பெற்ற திருச்சி கல்யாணராமனுக்கு ஸ்ரீ மகா பெரியவா விருது வழங்கப்பட்டது.
இதனை வழங்கி எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசியதாவது, ஸ்ரீ மஹாபெரியவர் வாழ்ந்த வாழ்க்கைபோல் யாரும் வாழவில்லை. சன்னியாசி ஆனது முதல் சித்தி அடைந்த வரை எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் பூரண சன்னியாசி. சொல்லுக்கும் செயலுக்கும் துளி கூட வித்தியாசம் இல்லாமல் வாழ்ந்தவர்.
இந்த நெடிய வாழ்க்கையில் நாம் எப்பொழுதும் கடவுள் சம்பந்தத்துடன் வாழ்கிறோம். உடலில் ஏழு சுரபி இருக்கிறது இதில் தான் நமது சிந்தனை இருக்கிறது. ஆனி மாத ஏகாதசிக்கு பீஷ்ம ஏகாதசி என்று பெயர். உபவாசம் இருக்கும் போது நல்ல மனதுடன் இருக்க வேண்டும் வாழ்க்கையில் ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது.
இறை நாம வை ஒவ்வொருவரும் தினந்தோறும் சொல்லி பழக வேண்டும். அப்போதுதான் மரண காலத்தில் அது ஞாபகத்திற்கு வரும். சாஸ்திரமும் புராணமும் இதை வலியுறுத்திச் சொல்கின்றன. நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பாசம் பந்தம் இதில் மாட்டிக் கொண்டு திணறுகிறோம்.
ஆழ்வார்கள் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று சொல்கிறார். நாம ஜெபம் செல்வதாலே பாவம் போய்விடுமோ என்று கேட்டபோது பெரியவர் சொல்கிறார் நாமா உன் உள்ளத்திலும் நல்லதொரு சிந்தனையை ஏற்படுத்தும் என்கிறார். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா, விருதுநகர் ஏஏடிஎஸ்பி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.