செய்திகள்மாநகராட்சி

மதுரையில் கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தின் மூலம் திடக்கழிவுகள் அகற்றும் பணி | மேயர் ஆய்வு

Solid waste disposal in Madurai by sewage suction vehicle Mayor's study

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் அடைப்புக்களை சரிசெய்ய சென்னை பெருநகர மாநகராட்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தின் மூலம் குயவர்பாளையம் மற்றும் சின்னக்கண்மாய்பகுதிகளில் திடக்கழிவுகள் மற்றும் திரவக்; கழிவுகள் அகற்றும் பணியினை மாண்புமிகு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் (30.07.2022) பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணிகள், பேவர் பிளாக் மற்றும் தார்ச்சாலைகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் தூhர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புக்களை எடுப்பதற்கு ஜெட் ராடிங், மினிஜெட் வாகனம், மண் அள்ளும் இயந்திரம், இலகுரக கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் உள்ளிட்ட திடக்கழிவு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பெய்து வரும் மழையினால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழங்கால பாதாள சாக்கடை கழிவு தொட்டிகளில் மழைநீர் மற்றும் சாலையோர மணல்கள், இதர கழிவுகள் சென்று அடைப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. அதனைத் தவிர்க்கும் பொருட்டும், கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் அடைப்புக்களை அகற்றவும், எளிதில் கழிவுநீர் நிலையத்திற்கு செல்லவும் அப்பணியினை மேற்கொள்வதற்கு சென்னை பெருநகா மாநகராட்சியில் இருந்து கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் (ளுரிநச ளுரஉமநச ஏநாiஉடந) கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று (30.07.2022) மண்டலம் 4 பழைய குயவர்பாளையம் சாலை பகுதிகள், பழைய கீழ்மதுரை ஸ்டேசன் ரோடு காமராஜர்புரம், சி.எம்.ஆர்.ரோடு. சின்னக் கண்மாய் பகுதிகள், லெட்சுமிபுரம் சிந்தாமணி ரோடு, மகால் சின்னக்கடைத் தெரு, சுங்கம்பள்ளிவாசல், இஸ்மாயில்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் திடக்கழிவுகள், திரவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்படும் பணியினை மேயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, நகரப் பொறியாளர் லெட்சுமணன், செயற்பொறியாளர் ரவிச் சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் அலெக்ஸ்சாண்டர், உதவிப் பொறியாளர் முருகன், சுகாதாரஅலுவலர்சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: