கலெக்டர்செய்திகள்

மதுரையில் கனமழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க கலெக்டர் அறிவுரை

Collector advised to protect livestock from heavy rains and floods in Madurai

வடகிழக்கு பருவமழையினால் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக வெளியே அழைத்து செல்வதை தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.

கால்நடைகள் மின்சாரம் பாய்ந்து இறப்பதை தவிர்க்க மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றிற்க்கு அருகில் கால்நடைகளை அழைத்து செல்வதையோ, கட்டுவதையோ தவிர்க்க வேண்டும். பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, அருகிலோ கால்நடைகள் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகிலோ, ஆற்றங்கரை ஓரத்திலோ அல்லது தாழ்வான நீர்பிடிப்பு பகுதிகளிலோ கட்டி வைக்க வேண்டாம்.

மேலும், கால்நடைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தற்பொழுது நோய் தடுப்பு நடவடிக்கையாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

அதனை முறையாக பயன்படுத்தி விடுபாடின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், கால்நடை கொட்டகைகளை சுத்தமாக கிருமிநாசினி தெளித்து பராமரிக்குமாறும் மற்றும் கால்நடைகளை அவசர சிகிச்சைக்கு நடமாடும் அவசர சிகிச்சை ஊர்தி (கால்நடை ஆம்புலன்ஸ்) இலவச எண்.1962 அழைத்து உதவி பெறவும் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: