
மதுரையில் கத்திமுனையில் வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் பிரபு 22. இவர் அவனியாபுரம் அம்பேத்கர் தெரு சந்திப்பில் சென்றபோது அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி சக்கிமங்கலம் ஆசாரிய காலனியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆசாரி மணி 27, சிவகங்கை மாவட்டம் பெரிய சிலைமானை சேர்ந்த சண்முகம் மகன் தினகரன் என்ற தீனா 20.
இருவரும் கத்திமுனையில் மிரட்டி பிரபுவிடம் இருந்து ரூபாய் ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரபு கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் என்ற ஆசாரி மணி, தினகரன் என்ற தீனா இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல் ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் சோனைமுத்து மகன் சத்யநாராயணன் 26. இவர் அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு எம் எம் சி காலனி சந்திப்பில் சென்றபோது கல்மேடு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஆதிஸ்வரன் 21, சிலைமானை சேர்ந்த முருகக் கடவுள் மகன் அருண்குமார் என்ற கீரி 19.
இருவரும் அவரை கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்து ரூ.2350ஐ வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து சத்யநாராயணன் கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதீஸ்வரன்,அருண்குமார் இருவரையும் கைது செய்தனர்.