ஆர்ப்பாட்டம்செய்திகள்

மதுரையில் கஞ்சா, குட்கா போதைப் பொருளை தடை செய்யக் கோரி பாமக சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்

Joint protest protest by BAMA to demand ban on Ganja and Gutka drugs in Madurai

மதுரை பழங்காநத்தம் பகுதியில், மதுரை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மாவட்ட பாமக சார்பில், மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தமிழகத்தில் முழுவதுமாக தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் அழகர்சாமி, செல்வம், செல்வகுமார் வீரக்குமார் மற்றும் பாமக மாவட்டத் தலைவர் முருகன், மாநிலத் துணைத் தலைவர் செந்தில்குமார், பாமக இளைஞரணி துணைச் செயலாளர் மாரிச் செல்வம் மற்றும் பாமக நிர்வாகிகள் மகளிர் அணி அமைப்பு சார்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டு, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர்.
Back to top button
error: