
மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, சேடப்பட்டி, அரசம்பட்டி ஆகிய போலீஸ் நிலைய சரகத்தில் கஞ்சா கடத்திய மற்றும் பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன் மூலமாக அவர்களின் ஈட்டிய சொத்துக்களான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 41 பேரின் 15 வீடுகள் 21 இடம் மற்றும் நிலங்கள்5 கடைகள் என ரூ.7 கோடி ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்து 922 அசையா சொத்துகளும் இரண்டு நான்கு சக்கர வாகனமும் இரண்டு இருசக்கர வாகனமும் என ரூ 8 லட்சத்து 49 ஆயிரத்து 981 அசைவம் சொத்துக்கள் என மொத்தம் ஏழு கோடி 12 லட்சத்து ஆயிரத்து 903 முடக்கம் செய்யப்பட்டது .
மேலும் கஞ்சா வழக்கில் 35 பேர் கைது செய்யப்பட்டு 11 பேர் குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை மூலம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் தெரிவித்தார்.