மதுரையில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு : வரும்18.05.2022-ம் தேதி கலந்து கொள்ள அழைப்பு
Veterinary Medical Consultant Direct appointment selection for the job

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 719 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 1.90 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2024-22) புதிய கால்நடை மருத்துவ
வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ
ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும், வரும் 18.05.2022-ம் தேதி (வெள்ளிக்கிழமை நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இந்த நேர்முகத்தேர்வு மதுரை, சிவகங்கை மெயின்ரோடு, சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் (மதுரை ஆவின்) என்ற முகவரியில் காலை 11.00 மணிக்கு நடைபெறும். இவ்வாறு ஆவின் பொது மேலாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.