மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 75-வது சுதந்திர தின விழா
75th Independence Day Celebration of SDPI Party in Madurai

மதுரை வடக்கு மாவட்ட தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் சகோதரி நஜ்மா பேகம் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வதை்து சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
முன்னாதாக வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார் செயலாளர் கமால் பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிக்கந்தர் மீடியா, இம்தியாஸ் அகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் கதிஷா இப்றாகீம், பொதுச் செயலாளர் சையது அலி பாத்திமா, எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க வடக்கு மாவட்ட தலைவர் நிசார், மற்றும் தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய மூவர்ண கொடி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர் இறுதியாக 28வது வார்டு தலைவர் ராஜா உசேன் நன்றி பாராட்டினார்.