செய்திகள்

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இளைஞர் திருவிழா | சு.வெங்கடேசன் எம்.பி., பங்கேற்பு

Youth Festival organized by Indian Democratic Youth Association in Madurai S. Venkatesan participation

மதுரை புறநகர் மாவட்டத்தின் சார்பில் தாரை, தப்பட்டை கலைநிகழ்சியுடன் மதுரை ஊர்மெச்சிகுளம் மந்தை திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மதுரை மாவட்டத்தில் விளையாட்டு மற்றும், கலை இலக்கிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் மற்றும் கைப்பந்து போட்டியில் வென்றவர்கள், கபடி போட்டியில் வென்றவர்கள் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோருக்கு நினைவு பரிசினை வழங்கினார்

நடைபெற்ற இவ்விழாவில், இராண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்பட இயக்குனர் அதியன் ஆதிரையை சு.வெங்கடேசன் பாராட்டினார்.

மேலும், வன்னிவேலம்பட்டி தமிழன்னை கலை குழுவினரின் கோலாட்டம் கலை நிகழ்வுகள், கரிசல் கருணாநிதி மற்றும் காம்ரேட் டாக்கிஸ் குழுவினரின் பாடல்கள், விஜய் டிவி புகழ் ஆத்தங்குடி இளையராஜா குழுவினரின் கிராமிய பாடல்கள் நடைபெற்றது.

கூடுதலாக விழாவில், வேலு ஆசான் அவர்களின் பறை இசை முழக்கம் நிகழ்ச்சி, ஊர்மெச்சிகுளம் முத்துநாயகி அம்மன் சிலம்பாட்டக் கலைக் குழுவின் ஆட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்விற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் பாலா சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கார்த்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: