
ஆவின் பால் பண்ணையில் வேலை வாங்கி தருவதாக போலி ஆணை கொடுத்துரூ 12 லட்சம் மோசடி செய்த நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். சோழவந்தான் முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் 25. இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்.
அப்போது ஆவின் பால் பண்ணையில் வேலை வாங்கி தருவதாக கூறிய நான்கு பேர் ஆனந்த கிருஷ்ணன், தனசேகரன், வைரவ ஜெயபாண்டி, மணி பாரதி ஆகியோர் அவரிடம் ஆசிய வார்த்தை கூறி ஆவின் பால் பண்ணையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக போலியான ஆணை ஒன்றை கொடுத்து ரூ.12 லட்சம் பெற்றுள்ளனர்.
அது போலியான என்று பின்னர் அவருக்குத் தெரியவந்தது. இது குறித்து அருணாச்சலம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.