
மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் பயன் பெறும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க தலா 50 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கவும் அச்சங்கங்களுக்கு தேவைப்படும் பால் குவளைகள் (Milk Cans) பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்கவும் தலாரூ.1.00 இலட்சம் வீதம் உதவி தொகை வழங்க தமிழக அரசால் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறி முறைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு சங்கத்திற்கு ரூ.1.00 இலட்சம் நிதி விடுவிக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக்கப்படுவர். சம்பந்தப்பட்ட மாவட்ட துணைப்பதிவாளர் (பால்வளம்) அவர்களால்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க உரிய முன்மொழிவு பெறப்பட்ட 4 மாதகாலத்திற்குள் சங்கத்தை பதிவு செய்ய மாவட்ட துணைப்பதிவாளர் (பால்வளம்) அவர்களால் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
சங்க உறுப்பினர்கள் மூலமாக பெறப்படும் பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
மகளிர் குழுக்கள் அதிகம் பயன் பெற்ற கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்தற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் 1 கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறைஎண். 106, முதல் தளம், பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை 625020 என்ற முகவரியிலும், 0452- 2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.