செய்திகள்விபத்து

மதுரையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவிலில் கூழ் காய்ச்சும் போது பாத்திரத்தில் விழுந்த நபர் பலி

In Madurai, a person fell into a vessel while boiling pulp in a temple in front of Adi Velli

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திகடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் தயாரிக்கப்பட்டது.

அப்பொழுது கூழ் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்ற 54 வயது என்பவர் எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டபோது கொதித்து கொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்தார்.

அப்போது அதீத வெப்பத்துடன் இருந்த கூழானது உடல் முழுவதும் கொட்டியதால் காயத்தால் துடித்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சுமார் 70 சதம் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முத்துக்குமார் என்கின்ற முருகன் நேற்று இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: