
மதுரை லட்சுமிபுரம் அடுத்த கான்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 38 ஆண்டுகளாக ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு பால், பன்னீர், தயிர், இளநீர், விபூதி என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணைகள் கட்டப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதனைத்தொடர்ந்து 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.
இந்தக் கோவிலானது 38 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பாக தோன்றி அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலித்து வருவதாகவும், எவ்வித பிரச்சனைகள் வந்தாலும் மனதில் தேவி கருமாரி அம்மனை நினைத்தாலே பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாகவும், இக்கோவில் திருவிழா அன்று மழை பெய்வது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்விற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் பெரிசேகரன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.