
அரசு தொழிற்பயிற்சிநிலையம் (மகளிர்) மதுரையில், 2022-ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டின்படி மாநில அளவில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் 18.08.2022 முதல் 25.08.2022 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. கட்டணமின்றி தங்கும் விடுதி வசதி உண்டு, தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.750/- மற்றும் அனுமதிக்கப்படும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் சம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாநில அளவிலான
கலந்தாய்வுக்கு தரவரிசை உள்ளிட்ட நாள் நடைபெறும் கலந்தாய்வு மற்றும் பட்டியல் www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50/- ஆகும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரை (மகளிர்)-ல் பயிற்சி பெற விரும்புபவர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒரு வருட தொழிற்பிரிவுகள்-COPA, DTPO, Sewing Technology, Cosmetology மற்றும் இரண்டு வருட தொழிற்பிரிவுகள்-Electronic Mechanics, Technician Medical Electronics ஆகிய தொழிற்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.
இது குறித்து மேலும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது மதுரை மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான 0452-2560544, 8248907516 ஆகிய எண்ணிற்கோ அல்லது www.itiimcmdu.org என்னும் முகவரியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரை (மகளிர்). மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மதுரை / மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மதுரை ஆகிய அலுவலகங்களில் அசல் சான்றிதழ்கள் – T.C, Mark Sheet, Community Certificate, Aadhaar, Passport size photo ஆகியவற்றுடன் வேலை நேரத்தில் நேரில் வந்து விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:34, நாள்:30.03.2022-ன்படி, பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.
இதுபோல 8-ஆம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 10-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.