செய்திகள்விருது | விழா | கூட்டம்

மதுரையில் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

In Madurai, the Guide Men Foundation distributed saplings on the occasion of Abdul Kalam Memorial Day

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தனது தனிப்பட்ட சேமிப்பு மூலமாக வாங்கப்பட்ட பயனுள்ள நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

மேலும் அப்துல்கலாம் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்துரைத்த கருத்துக்களை வழிகாட்டி மணிகண்டன் முன்மொழிய அனைவரும் அதை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் முதியோர் இல்லம் வளாகத்தில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், கிரேசியஸ், ஷேக்மஸ்தான், பாலமுருகன், செந்தில்குமார், ரமேஷ்குமார், முதியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் வழிகாட்டி மணிகண்டன் நன்றி கூறினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: