கலெக்டர்செய்திகள்

மதுரையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

Collector invites applications from eligible persons under Housing for All scheme in Madurai

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக்கோட்டத்தின், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு அருகில் கீழ்க்கண்ட 3 திட்டப்பகுதிகளில் 2,024 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வ.

எண்

திட்டப்பகுதியின் பெயர் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை பயனாளிகளின் பங்குத்தொகை இலட்சத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் முகவரி
1. இராஜாக்கூர் பகுதி – 2 512 (G+3) 1.42 நிர்வாகப் பொறியாளர் அலுவலகம்,

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,

169, கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை-625 020.

2. கரடிக்கல் 840 (G+3) 1.00
3. உச்சப்பட்டி தோப்பூர் 672 (G+3) 0.50

”அனைவருக்கும் வீடு” வழங்கும் திட்ட விதிகளின் படி நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர், கீழ்க்கண்ட விபரங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடோ, வீட்டடி மனையோ இருக்க கூடாது.
2. விண்ணப்பதாரின் மாத வருமானம் ரூ.25,000/-க்குள் இருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர் மற்றும் மனைவி/கணவன் ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
4. பயனாளியின் பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கான சம்மதக் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
5. விண்ணப்பதாரர் முன் பணமாக ரூ.10,000/-க்கான வங்கி வரைவோலையை “THE EXECUTIVE ENGINEER, TNUHDB, Madurai Division, Madurai” என்ற பெயரில் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மேற்கண்ட திட்டப்பகுதிகளில் குடியிருப்பு வேண்டுவோர் விண்ணப்பிப்பதற்கு 20.07.2022 முதல் 23.07.2022 ஆகிய 4 நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: