செய்திகள்

மதுரையில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு | தகுதியானவர்கள் கலந்து கொள்ள அழைப்பு

Free Training Course for All Types of Competitive Examinations in Madurai | Those who qualify are invited to attend | TNPSC - GROUP VII And VIII

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ TNPSC – GROUP VII மற்றும்‌ VIII தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில்‌ காலியாக உள்ள செயல்‌ அலுவலர்‌ 78 பணிக்காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

GROUPVII
விண்ணப்பிக்க கடைசி நாள் :17/06/2022
காலியிடங்கள் எண்ணிக்கை : 42
கல்வித்தகுதி : ஏதேனும் இளங்கலைப் பட்டப்படிப்பு
எழுத்துத்தேர்வு : 10/09/2022

GROUPVIII
விண்ணப்பிக்க கடைசி நாள் :18/06/2022
காலியிடங்கள் எண்ணிக்கை : 36
கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி
எழுத்துத்தேர்வு : 11/09/2022

இத்தேர்வினை இந்து மதத்தினை சார்ந்தவர்கள்‌ மட்டுமே விண்ணபிக்க வேண்டும்‌. போட்டித்தேர்விற்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மைய கட்டிடத்தில்‌ கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்‌ சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்‌ குறிப்பிட்ட காலவெளி இடையில்‌ மாதிரி தேர்வுகள்‌ நடத்தப்படும்‌. இப்பயிற்சி வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையால்‌ உருவாக்கப்பட்ட https:/tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவு செய்து பதிவிறக்கம்‌ செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்‌.

மேற்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில்‌ காலியாக உள்ள செயல்‌ அலுவலர்‌ 78 பணிக்காலியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்‌ செவ்வாய்‌ மற்றும்‌ வெள்ளி கிழமைகளில்‌ மட்டும்‌ பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட உள்ளது. மேலும்‌ இவ்வலுவலகத்தில்‌ செயல்படும்‌ நூலகத்தில்‌ அனைத்து வகையான போட்டித்தேர்விற்கும்‌ மாணவர்கள்‌ தயார்படுத்திட ஏதுவாக புத்தகங்கள்‌ பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே. இவ்வலுவலகத்தில்‌ நடைபெறும்‌ கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் ‌கலந் துகொள்ள விருப்பம்‌ உள்ள மனுதாரர்கள்‌ தங்களது பாஸ்போர்ட்‌ சைஸ்‌ போட்டோ ஒன்று, ஆதார்‌ அட்டைநகல்மற்றும்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியத்தால்‌ அறிவிக்கப்பட்டுள்ள TNPSC – GROUP VII மற்றும்‌ VIII தேர்விற்கு விண்ணப்பம்‌ ‘செய்திருப்பின்‌ அதன்‌ நகலுடன்‌ மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்திற்கு நேரில்‌ வருகை தந்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்‌ பதிவு செய்து கொள்ளுமாறு துணை இயக்குநர்‌ ஆ.இராமநாதன் ‌கேட்டுக்கொள்கிறார்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: