
மதுரையில் எட்டு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கே. புதூர் சர்வேயர் காலனி அய்யாவு தேவர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 52. இவர் வீட்டில் முன்பாக நிறுத்தி இருந்த ரூ 5ஆயிரம் மதிப்புள்ள பைக்கை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து சீனிவாசன் திருப்பாலை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளம் புது ராம்நாடு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தினேஷ்குமார் 26. இவர் காந்தி மியூசியம் அருகே தான் ஓட்டிச் சென்ற பத்தாயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார். இந்த பைக்கை மர்ம ஆசாமி திருடச் சென்றுவிட்டார் .இது குறித்து தினேஷ் குமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
செல்லூர் பகத்சிங் ரோடுவை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார் 26 .இவர் வடக்கு வெள்ளிவீதியில் உள்ள ஒரு செல் விற்பனை நிலையத்திற்கு முன்பாக தனது பைக்கை நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை மர்ம சாமி திருடிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார்.
எஸ் எஸ் காலனி ஜவகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் வெங்கடேஷ் பிரசாத் 25 இவர் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த ரூ20ஆயிரம் மதிப்புள்ள பைக்கை திருடிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் பிரசாத் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.
தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரை சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டி 33 .இவர் திருப்பரங்குன்றம் சர்வீஸ் ரோடு முத்து பாலம் அருகில் ரூ 15 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார் .இந்த பைக்கை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இது குறித்து அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார் .
மதுரை பாசிங்காபுரத்தைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தண்டபாணி 39. இவர் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே நிறுத்தியிருந்த ரூ 10,ஆயிரம் மதிப்புள்ள பைக் திருடுபோய்விட்டது. இது குறித்து தண்டபாணி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
மதுரை கீழ் மதுரை சி எம் ஆர் ரோடுவை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் வினோத் குமார் 20. இவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த பத்தாயிரம் மதிப்புள்ள பைக் திருட்டு போய்விட்டது. இது குறித்து அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
அச்சம்பத்து ஏர்குடியை சேர்ந்தவர் முத்துசாமி 35. இவர் சிம்மக்கல் அனுமார் கோவில் அருகே பத்தாயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார். இந்த பைக்கை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் விளக்கத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தொலைபேசி தேடி வருகின்றனர்.