
தமிழ்நாடு முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி, சுற்றுலாத்துறையினை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம் சென்னையிலிருந்து பொது மக்களின் பேராதரவோடு மிகச்சிறந்த முறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயங்கி வருகிறது.
இச்சுற்றுலாவினை தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இருந்து இயக்க முடிவு செய்து இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக மதுரையிலிருந்து தினசரி திருப்பதி சுற்றுலா வருகின்ற 08.08.2022 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவ உணவு, குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி மற்றும் சிறப்பு தரிசன டிக்கட்டுகள் உட்பட கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.4,000/-மும், சிரியவர்களுக்கு ரூ.3,700/-மும் (4 வயதிலிருந்து 10 வயதிற்கு உட்பட்டோர்க்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்சுற்றுலாவில் பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இச்சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களுக்கு மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு, சேலம் அவர்களை 0452-2337471 என்ற தொலைபேசி எண்ணிற்கும் மற்றும் 91769 95822 என்ற கைப்பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவலினை தெரிந்து கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளமான www.ttdconline.com-ல் சுற்றுலா பற்றிய விவரங்கள் மற்றும் முன்பதிவினையும் செய்து கொள்ளலாம் என சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.