செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 104.51 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி: அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

Madurai News | மதுரை செய்திகள்

திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி மற்றும் சேடபட்டி ஒன்றியங்களில் மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட 1,493 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 104.51 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து தொகுப்பு, முகக்கவசம் மற்றும் முழு உடற்கவசம் ஆகியவற்றை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி மற்றும் சேடபட்டி ஒன்றியங்களில் மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட 1,493 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 104.51 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து தொகுப்பு, முகக்கவசம் மற்றும் முழு உடற்கவசம் ஆகியவற்றை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கி தெரிவிக்கையில்:-

மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. உடனடியாக கிராமப்புற பகுதிகளில் 120 மினி கொரோனா கவனிப்பு மையங்கள் தொடங்கப்பட்டன. 3,894 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு வீடு வீடாக சென்ற காய்ச்சல் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அடுத்தபடியாக தங்களது உயிரை பொருட்படுத்தாமலும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தியாக உணர்வோடு மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் பணியில் ஈடுபட்ட சுமார் 3,894 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும் கடனுதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து பெண்கள் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து செயல்படுவோம். விரைவில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழச்சியில் திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 289 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.20.23 லட்சம் மதிப்பிலும், கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 185 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.12.95 லட்சம் மதிப்பிலும், டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 327 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.22.89 லட்சம் மதிப்பிலும்.

மேலும், உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 156 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.10.92 லட்சம் மதிப்பிலும், செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 260 மகளிH சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.18.20 லட்சம் மதிப்பிலும் மற்றும் சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 276 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.19.32 லட்சம் மதிப்பிலும்,என மொத்தம் 1,493 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.104.51 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து தொகுப்பு, முகக்கவசம் மற்றும் முழு உடற்கவசம் ஆகியவற்றை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, திட்ட அலுவலர், மகளிர் திட்டம் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: