செய்திகள்மாநகராட்சி

போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி | மதுரை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கிவைத்தார்

Awareness rally against drugs Madurai Mayor V. Indrani Ponvasant inaugurated it

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாணவ, மாணவிகள் (11.08.2022) ஏற்றுக் கொண்டனர்.

தமிழக அரசு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 11.08.2022 முதல் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடுவதற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் (11.08.2022) போதை பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியினை மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து மாணவ, மாணவிகளும் போதை பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை மாநில அளவிலும், தேசிய அளவிலும் சிறப்பாக கொண்டாடப்பட நிலையில் வருகின்ற 13.08.2022 முதல் 15.08.2022 மூன்று நாட்கள் குடிமக்களாகிய நாம் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் இருந்து விழிப்புணர்வு பேரணியை மேயர் கொடியசைத்து (11.08.2022) துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் சுமார் 250 தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் தேசியக் கொடியினை ஏந்திச் சென்றனர். இப்பேரணியானது மாநகராட்சி மைய அலுவலகத்திலிருந்து தல்லாகுளம், தமுக்கம் மைதானம் வரை சென்றடைந்தது.

இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர்ரகுமான், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, நகர்நலஅலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் அமிர்தலிங்கம், சையத் முஸ்தபா கமால், விசாலாட்சி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் நாகேந்திரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: