அமைச்சர்செய்திகள்

பொதுமக்கள் எதிர்ப்பு | சாத்தையாறு அணை உயர்த்துவதை கைவிட்டார் அமைச்சர் துரைமுருகன் | அமைச்சர் மூர்த்தி பேச்சு

Public protest | Minister Duraimurugan abandons construction of Satthayaru Dam | Minister Murthy's speech

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, மேட்டுப்பட்டியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது, கடந்த 1996 முதல் 2001 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனை அழைத்து வந்து சாத்தையாறு அணையை உயர்த்துவதற்கு திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், அருகில் இருந்த கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை கைவிட்டு விட்டோம். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சராக துரை முருகனை, வைத்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, சாத்தியார் அணையின் அருகில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் திமுதிமுவென அமைச்சர் துரைமுருகனை நோக்கி வந்ததால் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்து விட்டு சென்று விட்டார்.

அதனால், இந்தப் பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளது. இந்த முறை கண்டிப்பாக சாத்தையாறு அணை உயர்த்தப்பட்டு பெரியார் கால்வாயில் இருந்து நீரை கொண்டுவந்து இந்தப் பகுதியை செழிப்படைய முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: