
மதுரை மாநகரில் செயல்படும் கல்லூரிகளில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பயணிப்பதும் அதிக அளவு சத்தம் எழுப்பும் சைலன்ஸர் மற்றும் ஹாரன் வைத்திருப்பதும் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தை உணராமல் அதிவேகமாக பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இது குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகம் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் இரண்டு நபருக்கு மேல் வரக்கூடாது எனவும் மிதமான வேகத்திலேயே வரவேண்டும் எனவும் கட்டாயம் தலைகாசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் மற்றும் பாரன்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், பல மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பயணம் செய்வது தற்போது இணையத்தில் அதிக அளவு வைரல் ஆகி வருகிறது மேலும் எதிரே வரும் வாகனத்தில் முந்தி செல்லும் வரும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அல்லது உயிர்பலியும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என அச்சத்துடன் எதிரே வரும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றன.
வெறும் அசம்பாவிதம் நடக்கும் முன் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்களும் கட்டாயம் தனது பிள்ளைகளை வாகனத்தில் அனுப்பும்போது மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கத்தை அனுப்ப வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் காவல்துறை இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.
சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோவானது விளாச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் அதிவேகமாக வாகனத்தில் செல்வதும் அதில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஹெல்மெட் அணியாமல் எதிர் திசையில் யார் வருகிறார் என கூட பார்க்காமல் செல்வது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என குற்றச்சாட்டு வைக்கின்றன.
எனவே மாணவர்கள் தங்களது எதிர்கால கருத்தில் கொண்டு பொறுமையுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர். பொறுப்புடன் நடந்து கொள்வார்களா மாணவர் சமுதாயம் நாளைய பாரதம் இவர்கள் கையிலே இன்னி செயல்பட்டால் நம் நாடு மட்டுமல்ல உங்கள் வீடும் சிறப்போடும் இருக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.